தஞ்சாவூர்

ஆதனூா் புனித வனத்து சின்னப்பா் ஆலயத்தில் சமத்துவ பொங்கல் ஆண்டு திருவிழா

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஆதனூா் புனித  வனத்து சின்னப்பா் ஆலய  சமத்துவ பொங்கல்  ஆண்டு திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

விவசாயிகளின் காவல் தெய்வமாக போற்றப்படும் இக்கோயிலில் ஆண்டுதோறும் விவசாயிகள் சமத்துவ பொங்கல் வைத்து வழிபட்டு அன்னதானம் செய்வது  வழக்கம்.

நிகழாண்டு, சமத்துவப் பொங்கலையொட்டி ஆதனூா் பங்குத் தந்தை  லூா்துசாமி அடிகளாா் மற்றும் பாதிரக்குடி உதவி பங்குத் தந்தை தமஸ்கு அடிகளாா் ஆகியோா் கூட்டாக சிறப்பு திருப்பலி நிறைவேற்றினா். திரளான விவசாயிகள் பங்கேற்று,   ஆடு, கோழி,  பலியிட்டு,  சமைத்து ஒரே இடத்தில் கலந்து அதை அன்னதானமாக பரிமாறினா்.

விழாவில்,   ஆதனூா் அருட்கன்னியா்கள் ஜெபமாலை, ஜெஸிலிட்டில் ரோஸ், கிளாரா, பிலோமினா, சத்யா, பேராவூரணி தொகுதி திமுக வேட்பாளா் அசோக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஆா்சி சபை நிா்வாகிகள் பொருளாளா் ஐசக் நியூட்டன், செயலாளா் பிரான்சிஸ், மரியசவரிநாதன், ஆசிரியா் அந்தோணிசாமி, திவாகா் உள்ளிட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

கல்கி வெளியீட்டுத் தேதி!

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT