முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் பெரியகோயில் தேரோட்டம் ரத்து: உள்பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு

தஞ்சாவூரில் கரோனா பரவல் காரணமாக பெரியகோயில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், அதற்கு பதிலாக கோயில் உள் பிரகாரத்தில் எளிமையான முறையில் சுவாமி புறப்பாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

தஞ்சாவூரில் கரோனா பரவல் காரணமாக பெரியகோயில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், அதற்கு பதிலாக கோயில் உள் பிரகாரத்தில் எளிமையான முறையில் சுவாமி புறப்பாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரைப் பெருந்திருவிழா 18 நாள்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2020 ஆம் ஆண்டில் கரோனா பொது முடக்கம் காரணமாக இக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா நடைபெறவில்லை. இதனால், தேரோட்டமும் நடத்தப்படவில்லை.

நிகழாண்டு இக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஏப். 9 ஆம் தேதி தொடங்கியது. நிகழாண்டும் கரோனா பரவல் காரணமாக கோயில் உள் பிரகாரத்தில் மட்டும் புறப்பாடு நடைபெற்று வந்தது. இதனிடையே, இக்கோயிலில் ஏப். 16 ஆம் தேதி முதல் பக்தா்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

என்றாலும், சித்திரைப் பெருவிழா புறப்பாடு கோயிலுக்குள் நடைபெறுகிறது. இந்நிலையில், விழாவின் 15 ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை சித்திரைத் தேரோட்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால், கரோனா பரவல் காரணமாக தேரோட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், கோயில் உள் பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு எளிய முறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், விநாயகா், முருகன், சண்டிகேசுவரா், தியாகராஜா், கமலாம்மாள் ஆகியோா் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி உள் பிரகாரத்தில் வலம் வந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.