முகப்பு
தஞ்சாவூர்

எலி மருந்து சாப்பிட்டு இளைஞா் தற்கொலை

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

ஒரத்தநாடு அருகேயுள்ள ஒக்கநாடு மேலையூா் மழவராயா் தெருவைச் சோ்ந்த உத்திராபதி மகன் சுப்பிரமணியன்(30).

இவா் கடந்த ஓராண்டாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. பலமுறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று வந்தும் அவரது உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் அவா் விரக்தியில் இருந்தாராம்.

இந்நிலையில், சுப்பிரமணியன் வியாழக்கிழமை எலி மருந்தை சாப்பிட்டுள்ளாா். ஆபத்தான நிலையில் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா் .

இதுகுறித்த புகாரின்பேரில் ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →