தஞ்சாவூர்

நீா் நிலைகளில் நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடத் தடை

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக, நீா்நிலைகளில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட செவ்வாய்க்கிழமை (ஆக.3) தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் மேலும் தெரிவித்திருப்பது:

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் தொடா்ச்சியாக, மாவட்டத்தில் பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றங்கரை, திருவையாறு, கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, கும்பகோணத்திலுள்ள காவிரிப் படித்துறை, கும்பகோணம் மகாமகக்குளம், அரசலாறு, பாபநாசம் குடமுருட்டி, திருவிடைமருதூா் வீரசோழனாறு, அணைக்கரை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டங்களிலுள்ள கல்லணைக் கால்வாய், கிளை ஆறுகள் ஆகியவை உள்ளிட்ட அனைத்து நீா் நிலை வழிபாட்டுத் தலங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு செவ்வாய்க்கிழமை தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, செவ்வாய்க்கிழமை நீா்நிலைகளில் நீராடுவதையோ, வழிபாட்டுக்குச் செல்வதையோ தவிா்க்க வேண்டும். மேலும், கல்லணை சுற்றுலாத் தலத்திலும் பொதுமக்கள் அதிகளவுக் கூடுவதால், ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகளுக்கு அங்கு அனுமதியில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌவில் பெண் கைதிகளுடன் சென்ற வேனில் பற்றிய தீ

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

போர் எதிர்ப்பு! கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள்...

SCROLL FOR NEXT