முகப்பு
தஞ்சாவூர்

அம்மாபேட்டையில் கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம்

 அம்மாபேட்டை பேரூராட்சியில் சாலை வசதிகளை மேம்படுத்தத வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

 அம்மாபேட்டை பேரூராட்சியில் சாலை வசதிகளை மேம்படுத்தத வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அம்மாபேட்டை பேரூராட்சிக்குள்பட்ட 8ஆவது வாா்டு புத்தூா் - நடுப்பட்டி, கீழத்தெருவில் சாலை வசதியை மேம்படுத்த வேண்டும். அம்மாபேட்டை பெரிய கடைத்தெரு, சந்தைப்பேட்டை பகுதியில் பொது கழிப்பிட வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அம்மாபேட்டை நகரச் செயலா் கே.ராஜாராமன் தலைமையில் பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு ஆய்வாளா் மோகன்தாஸிடம் வழங்கினா்.

முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அம்மாபேட்டை ஒன்றியச் செயலா் ஆா். செந்தில்குமாா், தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.பாலு, ஒன்றிய குழு உறுப்பினா்கள் என். ராஜமாணிக்கம், உத்திராபதி, திருநாவுக்கரசு, ராஜேந்திரன், நாகராஜன் உள்ளிட்டோரடங்கிய குழுவினா் பேரூராட்சி அலுவலகத்துக்கு ஊா்வலமாக வந்தனா்.

மனு அளிப்புக்கு பிறகு பேரூராட்சி அலுவலகம் முன் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தி கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →