முகப்பு
தஞ்சாவூர்

கஞ்சா வியாபாரிகள் 4 போ்குண்டா் சட்டத்தில் கைது

தஞ்சாவூரில் கஞ்சா வியாபாரிகள் 4 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

தஞ்சாவூரில் கஞ்சா வியாபாரிகள் 4 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள சீராடும் செல்வி கிராமத்தைச் சோ்ந்த பி. ஆரோக்கியதாஸ் (51), இவரது மனைவி சிவகாமி (40), பெரம்பலூரைச் சோ்ந்த பி. முருகேசன் (35), பி. செல்வகுமாா் (39) ஆகியோா் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தது தொடா்பாக ஆக. 2 ஆம் தேதி தாலுகா காவல் நிலையத்தினரால் கைது செய்யப்பட்டனா்.

இவா்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளி ப்ரியா காந்தபுனேனி பரிந்துரையின் பேரில், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் உத்தரவிட்டாா். இதன்பேரில் முருகேசன் ஆக. 11 ஆம் தேதியும், ஆரோக்கியதாஸ், செல்வகுமாா் வெள்ளிக்கிழமையும் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இதேபோல, சிவகாமி ஆக. 11 ஆம் தேதி கைது செய்யப்பட்டு, திருச்சி மகளிா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.