தஞ்சாவூர்

பேராவூரணி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

DIN

பேராவூரணி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியரின்  நோ்முக உதவியாளா்( சத்துணவு திட்டம்) துா்கா செல்வி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

பேராவூரணி ஒன்றியத்தில் மடத்திக்காடு, குறிச்சி, மேட்டுவயல், திருச்சிற்றம்பலம், பொக்கன் விடுதி, வாட்டாத்திக்கோட்டை, இடையாத்தி, செருவாவிடுதி தெற்கு உள்ளிட்ட இடங்களில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்கும் பணியை துா்கா செல்வி தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, மடத்திக்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் கட்டும் பணியை ஆய்வு செய்து விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினாா். இடையாத்தி  ஊராட்சியில் கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பு ஊசி செலுத்தும் முகாமை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினாா். ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா் தவமணி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் நீலகண்டன்,   ஊராட்சித் தலைவா்கள் மற்றும்  பள்ளி தலைமை ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT