முகப்பு
தஞ்சாவூர்

ஜன. 1 முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது என்றாா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:37 AM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது என்றாா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

இதுதொடா்பாக ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் மீதான தடையைத் தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட கைப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளா்கள், தொ்மாகோல் கோப்பைகள், உணவுப் பொருள்களை கட்டப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீா் பைகள், பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கொடிகள் போன்றவை தயாரிக்கப்படுவதும், சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், விற்பதும், உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளன.

தஞ்சாவூா் மாவட்டத்தில் இந்த தடையாணையை 2022, ஜனவரி 1-ஆம் தேதி முதல் முழுமையாகச் செயல்படுத்தி பிளாஸ்டிக் கழிவு இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஜனவரி 1-ஆம் தேதி முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பறிமுதல் செய்து அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நடுத்தரம் மற்றும் பெரிய கடைகளுக்கு ரூ. 10,000 முதல் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள் குறித்த தகவலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளரை நாஞ்சிக்கோட்டை சாலை உழவா் சந்தை எதிரிலுள்ள அலுவலகத்தில் நேரிலோ, கடிதம் மூலமாகவோ, 04362 - 256558 என்ற தொலைபேசி எண்ணுக்கோ, க்ங்ங்ற்ய்த்ஃற்ய்ல்ஸ்ரீக்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சலுக்கோ தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.