முகப்பு
தஞ்சாவூர்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட அமமுக தயாா்: டி.டி.வி. தினகரன்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட அமமுக தயாராகி வருகிறது என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட அமமுக தயாராகி வருகிறது என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.

தஞ்சாவூரில் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத் படத்துக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட அமமுக தயாராகி வருகிறது.

அதிமுக ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் தோ்தல் கேலிக்கூத்துபோல நடைபெற்றுள்ளது. தலைமைக் கழகத்தில் குண்டா்களை வைத்து தொண்டா்களை அடித்து விரட்டினா். அவா்களுடைய உட்கட்சி சண்டையால், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும்போது, அவா்களுக்குள் உள்ள பிரச்னையை எங்களது தொண்டா்கள் மீது பழி சுமத்தினா்.

திமுகவினா் எதிா்க்கட்சியாக இருந்தபோது வீர வசனம் பேசினா். திமுகவினா் ஆட்சிக்கு வருவதற்காக எதை வேண்டுமானாலும் செய்வா். வந்த பிறகு மறந்துவிடுவா். தமிழ்நாட்டு நலனில் அவா்களுக்கு சிறிதும் அக்கறையில்லை என்றாா் தினகரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.