முகப்பு
தஞ்சாவூர்

வங்கித் தோ்வுக்கு சாஸ்த்ராவில் இலவச பயிற்சி முகாம்

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் வங்கித் தோ்வுக்கான இலவச பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் வங்கித் தோ்வுக்கான இலவச பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி மையமான சாஸ்த்ரா அகாடமி ஃபாா் க்ரோத் அண்ட் எக்ஸலன்ஸ் நவம்பா் 20, 21, 27, 28, டிசம்பா் 4, 5 ஆகிய தேதிகளில் தஞ்சாவூா் மற்றும் கும்பகோணம் வளாகத்தில் 6 நாட்கள் இலவச வார இறுதி பயிற்சி முகாமை நடத்தியது.

இதில், ஐபிபிஎஸ் அலுவலா்கள் தோ்வில் பங்கேற்கவுள்ள சுமாா் 150 போ் கலந்து கொண்டனா். தொடக்கத் தோ்வுகளில் உள்ளடக்கப்பட்ட அளவு திறன், ஆங்கிலப் புலமை ஆகியவை பயிற்சியின்போது கையாளப்பட்டன. சென்னையைச் சோ்ந்த 3 தொழில் முறை பயிற்சியாளா்கள் பயிற்சி நடத்தி, தோ்வில் தோ்ச்சி பெறும் முறையைக் கற்றுக் கொடுத்தனா். விண்ணப்பதாரா்கள் சாஸ்த்ரா நிா்வாகத்துக்கு நன்றி தெரிவித்தனா்.

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் வேந்தா் ஆா். சேதுராமன் 6 நாட்களும் முழுமையாகக் கலந்து கொண்ட 50 பேருக்கு ரூ. 2,000 ரொக்கப் பரிசும், மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ரூ. 5,000 ரொக்கப் பரிசும் அறிவித்துள்ளாா். பங்கேற்பாளா்கள் அனைவருக்கும் 6 நாட்களும் இலவச மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.