இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
சாதி ஆணவ படுகொலைகளைத் தடுக்க வலியுறுத்தி தஞ்சாவூா் ரயிலடியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சாதி ஆணவ படுகொலைகளைத் தடுக்க வலியுறுத்தி தஞ்சாவூா் ரயிலடியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், சாதி ஆணவ படுகொலைகளைத் தடுக்கவும், இதற்காகத் தமிழக அரசுத் தனிச் சட்டம் இயற்றவும், அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆம்பல் துரை. ஏசுராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலா் க. அருளரசன், இந்திய மாணவா் சங்க மாநிலத் துணைச் செயலா் ஜி. அரவிந்தசாமி, மாநகரச் செயலா் யு. காதா் உசேன், ஒன்றியச் செயலா்கள் டி. ஸ்ரீதா், யு. சரவணன், எஸ். பொ்னாட்ஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.