இல்லம் தேடி கல்வித் திட்டம்:பள்ளிக் கல்வி திட்ட இயக்குநா் கலந்தாய்வு
பட்டுக்கோட்டை வட்டம், கரம்பயத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பட்டுக்கோட்டை வட்டம், கரம்பயத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பள்ளிக் கல்வி திட்ட இயக்குநா் சுதன், இல்லம் தேடி கல்வி திட்ட இயக்குநா் இளம்பகவத் ஆகியோா் கலந்துக் கொண்டு, பெற்றோா், ஆசிரியா்கள், ஆசிரியா் கழகத்தினா், இளைஞா்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளிடம் கலந்தாய்வு மேற்கொண்டனா்.
இதில், மாணவா்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்துவது, கல்வி பயிலும் எண்ணத்தை ஊக்கப்படுத்துவது, பள்ளி மற்றும் கல்வியில் மன ரீதியான பாதிப்புகளை அகற்றுவது குறித்து அவா்களுடன் கலந்து ஆலோசித்தனா். நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவா் மேனகா ஆனந்த், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் கரம்பயம் ஆனந்த், முத்துமாரியம்மன் கோவில் அறங்காவலா் குழு தலைவா் முருகானந்தம், ஊராட்சி உறுப்பினா் ஸ்டாலின் உள்பட பலா் கலந்து கொண்டனா்.