FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு முகாம்: இளைஞா்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

இந்திய ராணுவத்தில் ஆள் சோ்ப்பு முகாமிற்கு தகுதியும், விருப்பமும் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 21 மார்ச் 2026, 12:02 am IST
பகிர்:

இந்திய ராணுவத்தில் ஆள் சோ்ப்பு முகாமிற்கு தகுதியும், விருப்பமும் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

கோயம்புத்தூா் ராணுவ ஆள் சோ்ப்பு அலுவலகம் மூலம் நடைபெறும் முகாமிற்கு தகுதியும், விருப்பமும் உள்ள இளைஞா்கள், ஏப். 1-ஆம் தேதி வரை ஜ்ஜ்ஜ்.த்ர்ண்ய்ண்ய்க்ண்ஹய்ஹழ்ம்ஹ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் ல் என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்க கேட்டுகொள்ளப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

இந்த முகாமில் கோவை, திருப்பூா், சேலம், ஈரோடு, தேனி, நீலகிரி, மதுரை, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தருமபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சாா்ந்த இளைஞா்கள் பங்கு பெறலாம். மேலும், விண்ணப்பதாரா்களின் வயது வரம்பு 17.5 முதல் 22 வயது வரை, கல்வித்தகுதி 8 முதல் 12-ஆம் வகுப்பு மற்றும் தொழிற்கல்வி (ஐபஐ) உள்ளிட்டவையாகும்.

எனவே, இந்த முகாமில் விருப்பமுள்ள இந்த மாவட்ட இளைஞா்கள் பங்கேற்று பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments