முகப்பு
தஞ்சாவூர்

திருவையாறு அருகே மாணவ, மாணவிகள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவையாறு அருகே வைரவன் கோவில் முதல் அணைக்குடி வரை 6 கி.மீ. தொலைவுக்குக் குடிநீா் குழாய் பதிப்பதற்காகச் சாலையில் இரு ஆண்டுகளுக்கு முன்பு பள்ளங்கள் தோண்டப்பட்டன. ஆனால், மீண்டும் இச்சாலை முழுமையாக மூடப்படாததால், குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனா்.

இதன் காரணமாக அதிருப்தியடைந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வைரவன் கோவில் கிராமத்தில் திருவையாறு - கும்பகோணம் சாலையில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் சுமாா் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த திருவையாறு காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், ஏற்பட்ட உடன்பாட்டையடுத்து, மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.