பாபநாசத்தில் டிஐஜி ஆய்வு
பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவா் பிரவேஷ்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவா் பிரவேஷ்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, தஞ்சாவூா் ஊரக கோட்டத்தின் காவல் சரக சம்பந்தப்பட்ட பதிவேடுகள், வழக்கு கோப்புகள் குறித்து ஆய்வு செய்தாா். பின்னா், அலுவலக வளாகத்தில் தென்னை மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.
பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பூரணி, ஆய்வாளா்கள் வனிதா, அனிதா கிரேசி, பகவதி சரணம், கரிகால் சோழன், தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் திருநாவுக்கரசு மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனா்.