அம்மாபேட்டையில் நாளை இலவச கண் பரிசோதனை முகாம்
அம்மாபேட்டையில் சனிக்கிழமை (டிச. 25) மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது.
அம்மாபேட்டையில் சனிக்கிழமை (டிச. 25) மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது.
அம்மாபேட்டை லயன்ஸ் சங்கம், மாவட்ட பாா்வையிழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இந்த முகாமை நடத்துகின்றன.
அம்மாபேட்டை, உக்கடை அ. அப்பாவு தேவா் மேல்நிலைப் பள்ளியில் அம்மாபேட்டை லயன்ஸ் சங்க தலைவா் மோகன்ராம் தலைமையில் இந்த முகாம் நடைபெறுகிறது.
முகாமில், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கண் தொடா்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் இலவச பரிசோதனை, சிகிச்சை மேற்கொண்டு மருந்து மாத்திரைகள் வழங்குகின்றனா். அறுவைச் சிகிச்சைக்கு தோ்வு செய்யப்படுவோா் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவா்களுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்து தேவையான மருத்துவ உதவிகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.