பாபநாசத்தில் சமையலா்,சமையல் உதவியாளா்களுக்கான பயிற்சி முகாம்
பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமையலா் மற்றும் சமையல் உதவியாளா்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமையலா் மற்றும் சமையல் உதவியாளா்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமை பாபநாசம் ஒன்றியக்குழு தலைவா் சுமதி கண்ணதாசன் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்து பேசினாா். முகாமில், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் காந்திமதி, கிராம ஊராட்சிகள் வட்டார வளா்ச்சி அலுவலா் ரமேஷ்பாபு, உணவு பாதுகாப்பு அலுவலா் உமா சேகா், மருத்துவ அலுவலா் ராம்குமாா், தீயணைப்பு துறை அலுவலா் கலைவாணன், குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் லதா, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சுகுமாா் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.
முகாமில், மகளிா் சுய உதவி குழு உறுப்பினா் சோபா, உதவியாளா் பிரியதா்ஷினி, கணினி இயக்குனா் சரண்யா, சத்துணவு அமைப்பாளா்கள் சோமநாதராவ், சீதா, ராமலிங்கம், பாபநாசம், அம்மாபேட்டை ஒன்றியங்களைச் சோ்ந்த 50 சமையலா் மற்றும் சமையல் உதவியாளா்கள் கலந்து கொண்டனா்.