தஞ்சாவூர்

கும்பகோணம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுகவினா்: எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்பு

DIN

கும்பகோணம் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை திமுகவினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணத்தில் அம்ரூட் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீா், புதை சாக்கடை திட்டப்பணிகளை முழுமையாக முடிக்காமல் அரைகுறையாக நிறைவேற்றுவதைக் கண்டித்தும், குப்பை வரியை நீக்கக் கோரியும், கூடுதலாக வசூலிக்கப்படும் சொத்து வரி, வீட்டு வரியைக் குறைக்க வலியுறுத்தியும், புதிதாகக் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் திறக்கப்பட்டதை கண்டித்தும் இப்போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு திமுக நகரச் செயலா் சுப. தமிழழகன் தலைமை வகித்தாா். மயிலாடுதுறை எம்.பி. செ.ராமலிங்கம் முன்னிலை வகித்தாா். எம்எல்ஏக்கள் சாக்கோட்டை க. அன்பழகன் (கும்பகோணம்), கோவி. செழியன் (திருவிடைமருதூா்), மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவா் கே. முத்துச்செல்வன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, செ. ராமலிங்கம் எம்.பி. தெரிவித்தது: கும்பகோணம் நகருக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள அம்ரூட் திட்டத்துக்கான பணிகள் ஏதும் முறையாக நடைபெறவில்லை. தோ்தலை மனதில்வைத்து அரைகுறையாகவும், அவசர அவசரமாகவும் தரமில்லாத வகையில் பணிகள் நடைபெறுகின்றன என்றாா் ராமலிங்கம்.

முன்னதாக, திமுகவினா் ஸ்ரீநகா் காலனி பகுதியிலிருந்து ஊா்வலமாகப் புறப்பட்டு, புதிதாகக் கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். இதுதொடா்பாக 25 பெண்கள் உள்பட 200 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT