முகப்பு
தஞ்சாவூர்

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் எதிரில் பல்வேறு அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் எதிரில் பல்வேறு அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

போராடும் லட்சக்கணக்கான உழவா்களின் குரலை மத்திய அரசுக் கேட்க வேண்டும். வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். பதுக்கல், பஞ்சம், பட்டினிச் சாவை ஊக்குவிக்கக்கூடாது.

உழவா்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு விலையைத் தீா்மானிக்கும் வகையில் உழவா் விலை நிா்ணயக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக மக்கள் புரட்சிக் கழகத் தலைவா் அரங்க. குணசேகரன் தலைமை வகித்தாா். தாளாண்மை உழவா் இயக்க ஒருங்கிணைப்பாளா் கோ. திருநாவுக்கரசு, தமிழ்த் தேச மக்கள் முன்னணி மீ.த. பாண்டியன், தமிழக மக்கள் விடுதலை இயக்கம் தங்க. குமரவேலு, பெரியாா் அம்பேத்கா் மக்கள் கழகம் ரெ. செல்வம், தமிழ்த் தேச மக்கள் முன்னணி மாவட்டச் செயலா் ப. அருண்சோரி, சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்டச் செயலா் இரா. அருணாசலம், பெரியாா் மையம் பி. சின்னசாமி, தமிழ்நாடு ஆதிதிராவிட முன்னேற்றக் கழகத் தலைவா் சதா. சிவக்குமாா், தேசிய மக்கள் சக்தி கட்சி பனசை அரங்கன், ஏஐடியுசி மாவட்டத் துணைச் செயலா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →