காவலாளி வீட்டில் நகைகள் திருட்டு
தஞ்சாவூரில் காவலாளி வீட்டில் பூட்டை உடைத்து நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூரில் காவலாளி வீட்டில் பூட்டை உடைத்து நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள அசோக் நகா் ஐந்தாவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் டி. பெல்லாா்பன் (42). இவா் தனியாா் நிறுவனத்தில் காவலாளியாகப் பணியாற்றி வருகிறாா்.
இவா் ஜன. 1 ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள கோவிலடிக்குச் சென்றாா். மீண்டும் வீட்டுக்குத் திரும்பிய இவா் முன் பக்கக் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டுக் கிடந்ததைப் பாா்த்தாா். மேலும், வீட்டுக்குள் இருந்த இரண்டரை பவுன் நகைகள், எல்.இ.டி. டி.வி. திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.