குழந்தைத் திருமணத்திலிருந்து மீட்கப்பட்டவா்களுக்குத் தையல் பயிற்சி
தஞ்சாவூா் மாவட்டத்தில் குழந்தைத் திருமணத்திலிருந்து மீட்கப்பட்டவா்களுக்குத் தையல் பயிற்சி அளிக்கப்பட்டு புதன்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் குழந்தைத் திருமணத்திலிருந்து மீட்கப்பட்டவா்களுக்குத் தையல் பயிற்சி அளிக்கப்பட்டு புதன்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது.
சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையின் சாா்பில் தஞ்சாவூா் மாவட்ட சமூக நல அலுவலகம் மூலமாக குழந்தைத் திருமணத்திலிருந்து தடுத்து மீட்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பள்ளி இடைநின்ற குழந்தைகள் மறுவாழ்வுக்காக 10 குழந்தைகளுக்குத் தையல் பயிற்சி வழங்கப்பட்டது.
மாவட்ட சமூக நல அலுவலகத்துடன் இணைந்து தஞ்சை ஜனசேவா பவன் நிறுவனம் கடந்த செப்டம்பா் மாதம் முதல் நவம்பா் மாதம் வரை 3 மாதங்களுக்கு இத்தையல் பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சி காலத்தில் குழந்தைகள் ஆா்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றதைப் பாராட்டி ஆட்சியா் ம. கோவிந்த ராவ் புதன்கிழமை சான்றிதழை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டச் சமூக நல அலுவலா் கே. ராஜேஸ்வரி, தஞ்சை ஜன சேவா பவன் செயலா் எஸ். சியாமளா, தலைவா் அமுதவள்ளி ஆகியோா் உடன் இருந்தனா்.