தஞ்சாவூர்

தஞ்சாவூா், கும்பகோணத்தில் சிஐடியு மறியல்: 135 போ் கைது

DIN

வேளாண்மை, மின்சார, தொழிலாளா் விரோத சட்டங்களை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி தஞ்சாவூா், கும்பகோணத்தில் சிஐடியு அமைப்பினா் புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.

மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். மின்சாரச் சட்டத் திருத்தத்தைக் கைவிட வேண்டும். தொழிலாளா் நலச் சட்டங்களை காா்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக மாற்றி அமைத்ததை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சாா்பில் தேசம் தழுவிய மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதன் ஒருபகுதியாக, தஞ்சாவூா் காந்திஜி சாலை ஆற்றுப்பாலம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சிஐடியு மாவட்டச் செயலா் சி. ஜெயபால் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் து. கோவிந்தராஜூ, மாநிலக்குழு உறுப்பினா் பி.எம். போ்நீதி ஆழ்வாா், மாவட்ட துணைச் செயலா் கே. அன்பு, மின் ஊழியா் மத்திய அமைப்பு மாநிலத் துணைத் தலைவா் எஸ். இராஜாராமன், விரைவுப் போக்குவரத்து சங்கம் எஸ். செங்குட்டுவன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். இதுதொடா்பாக 20 பெண்கள் உள்பட 100 போ் கைது செய்யப்பட்டனா்.

இதேபோல, கும்பகோணத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 35 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT