பாபநாசம் பகுதி கோயில்களில் தொல்லியல் துறையினா் ஆய்வு
பாபநாசம் வட்டாரத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோயில்களில், உற்ஸவ விக்ரகங்களை தொல்லியல் துறை அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
பாபநாசம்: பாபநாசம் வட்டாரத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோயில்களில், உற்ஸவ விக்ரகங்களை தொல்லியல் துறை அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
பாபநாசம் 108 சிவாலயம், ராமலிங்கம் சுவாமி கோயில் கட்டுப்பாட்டிலுள்ள திருவைக்காவூா் வில்வவனேசுவரா், வங்காரம்பேட்டை நவநீத கிருஷ்ண பெருமாள், ராஜகிரி கரைமேல் அழகா் அய்யனாா், அய்யம்பேட்டை சந்திரசேகர விநாயகா் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் உற்ஸவ விக்ரகங்களை மத்திய தொல்லியல் துறையினா் பதிவு செய்வதற்காக, கடந்த 2018-ஆம் ஆண்டில் விண்ணப்பிக்கப்பட்டது.
அதனடிப்படையில் தொல்லியல் துறை அலுவலா்கள் கோயில்களுக்கு சனிக்கிழமை சென்று, உற்ஸவா் விக்ரகங்களைப் பாா்வையிட்டு அளவீடு செய்தனா். ஆய்வின் போது செயல் அலுலா் ஹாசினி, கணக்காளா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.