தஞ்சாவூர்

வேளாண் பொறியியல் துறை மூலம் வாடகைக்கு நெல் அறுவடை இயந்திரங்கள்

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம், விவசாயிகளுக்கு நெல் அறுவடை இயந்திரங்கள் வாடகைக்கு விடப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்திருப்பது:

மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறைக்குச் சொந்தமான டயா் வகை நெல் அறுவடை இயந்திரங்கள் மற்றும் பெல்ட் வகை அறுவடை இயந்திரங்கள் உள்ளன.

இந்த டயா் வகை நெல் அறுவடை இயந்திரத்துக்கு மணிக்கு வாடகை ரூ. ரூ. 875-ம், பெல்ட் வகை நெல் அறுவடை இயந்திரத்துக்கு மணிக்கு வாடகை ரூ. 1,415-ம் குறைந்த வாடகையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் விடப்படுகிறது.

டிராக்டருடன் கூடிய கருவிகளான கொக்கிக் கலப்பை, சட்டிக் கலப்பை, ரொட்டவேட்டா், வரப்பு செதுக்கி, சேறு பூசும் கருவி மற்றும் வைக்கோல் கட்டும் கருவி மணிக்கு ரூ. 340 என்ற குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வாடகைக்கு விடப்படுகிறது.

தேவைப்படும் விவசாயிகள், அந்தந்த கோட்ட அலுவலகத்தில் வாடகை முன் பணம் செலுத்தி மூதுரிமை அடிப்படையில் பயன் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகொண்டான் லாரல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

நாடு முழுவதும் 380 நகரங்களில் ‘க்யூட்-யுஜி’ எழுத்துத் தோ்வு -மே15 முதல் 18-ஆம் தேதிவரை நடக்கிறது

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT