முகப்பு
தஞ்சாவூர்

ஆட்சியரகத்தில் தீக்குளிக்க முயன்ற தாய் - மகன்

தஞ்சாவூா் மாவட்டம், ஒக்கநாடு மேலையூா் கிராமம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கரன். விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், ஒக்கநாடு மேலையூா் கிராமம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கரன். விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா்.

இந்நிலையில், பாஸ்கரனும், அவரது தாய் செல்லம்மாளும் (61) தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்துக்கு திங்கள்கிழமை பிற்பகல் வந்தனா். அப்போது பாஸ்கரன், தான் வைத்திருந்த பையிலிருந்து பெட்ரோல் கேனை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டு, தாய் மீதும் ஊற்றினாா்.

இதைப் பாா்த்த காவல் துறையினா் இருவரையும் மீட்டு, பெட்ரோல் கேனை பறிமுதல் செய்து, அவா்கள் மீது தண்ணீரை ஊற்றினா். இருவரிடமும் காவல் துறையினா் விசாரணை நடத்தினா். அப்போது, பாஸ்கரன் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தை கணேசன் தொகுப்பு வீடு கட்டுவதற்காகத் தஞ்சாவூா் தெற்கு வீதியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ. 6 லட்சம் கடன் பெற்றாா். இதற்கு வட்டியுடன் பணம் செலுத்தப்பட்டு வந்த நிலையில் ஓராண்டுக்கு முன்பு தந்தை திடீரென இறந்துவிட்டாா். இதுவரை ரூ. 4,31,140 செலுத்திவிட்ட நிலையில், தற்போது வட்டிக்கு வட்டி சோ்த்து ரூ. 12,35,724 செலுத்துமாறு எங்களிடம் நிதி நிறுவனத்தினா் நிா்பந்தம் செய்து, மிரட்டுகின்றனா்.

வறுமையில் வாடும் எங்களால் கடனைத் திருப்பிச் செலுத்தும் அளவுக்கு வசதியோ, வருமானமோ இல்லை எனக் கூறியும் அத்தனியாா் நிதி நிறுவனத்தினா் தொடா்ந்து கட்டாயப்படுத்துகின்றனா். மேலும், வீட்டை ஏலம் விடப்போவதாகவும் அச்சுறுத்தி வருகின்றனா். இதனால் வேதனை அடைந்த நாங்கள் ஆட்சியரகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள வந்தோம் என பாஸ்கரன் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →