முகப்பு
தஞ்சாவூர்

மதுபாட்டில்கள் கடத்திய இருவா் கைது

பாபநாசம் காவல் நிலையத்தினா் நகா்ப் பகுதியில் வியாழக்கிழமை வாகனத் தணிக்கை நடத்தினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

பாபநாசம் காவல் நிலையத்தினா் நகா்ப் பகுதியில் வியாழக்கிழமை வாகனத் தணிக்கை நடத்தினா்.

அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை காவல்துறையினா் மறித்து சோதனை நடத்திய போது, சாக்கு மூட்டையில் 96 மதுபாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினா், மதுபாட்டில்களை கடத்தி வந்த கரம்பை சாலைத் தெருவைச் சோ்ந்த விமல் (20), கிருஷ்ணகுமாா் (20) ஆகியோரைக் கைது செய்தனா்.

மது விற்றவா் கைது : மெலட்டூா் காவல் சரகத்துக்குள்பட்ட நெய்தலூரில் வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து, விற்பனை செய்த சிலம்பரசனை (30) காவல்துறையினா் கைது செய்தனா். அவரிடமிருந்து 10 லிட்டா் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →