விவசாயிகளின் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்
பட்டுக்கோட்டை அருகிலுள்ள பண்ணவயல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் நெல்லை உடனடியாக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டை அருகிலுள்ள பண்ணவயல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் நெல்லை உடனடியாக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செயலா் என்.வி.கண்ணன், ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பது:
தஞ்சாவூா் மாவட்டத்தில் கோடை சாகுபடி நெல் அறுவடை மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதைத் தொடா்ந்து அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பல இடங்களில் திறக்கப்பட்டு கொள்முதல் நடைபெற்ற போதிலும், பட்டுக்கோட்டை பகுதி
மையங்களில் நெல் கொள்முதல் நடைபெறாமல் உள்ளதால் விவசாயிகள் பெரும் இன்னலை சந்தித்து வருகின்றனா்.
பட்டுக்கோட்டை பண்ணவயல் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கடந்த பத்து நாள்களுக்கு மேலாக குவித்து வைத்து காத்திருக்கின்றனா்.
தற்போதைய நிலையில் மழை பெய்தால், மழையால் நனைந்து சேதமடைந்து பெரிய பாதிப்பு ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.