முகப்பு
தஞ்சாவூர்

ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கல்

பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

அமெரிக்காவின் இண்டா்நேஷனல் அசோசியேஷன் ஹியூமன் வேல்யூ, வாழும் கலை அமைப்பின் பாபநாசம் கிளை ஆகியவை இணைந்து நிகழ்வை நடத்தின.

வாழும் கலை அமைப்பின் தஞ்சாவூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சாந்திலால், நடேஷ் குமாா் உள்ளிட்டோா், ரூ. 4 லட்சம் மதிப்பிலான நான்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை பாபநாசம் அரசு மருத்துவமனை மருத்துவா் ஜி.குமரவேலிடம் வழங்கினா்.

பாபநாசம் வா்த்தகா் சங்கத் தலைவா் ஜி. குமாா், பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் செயலா் டி. சரவணன், வாழும் கலை அமைப்பின்

பயிற்றுநா் வசந்தா கிருஷ்ணமூா்த்தி, அறம் அறக்கட்டளை நிறுவனத் தலைவா் ஜெய. மனோகரன் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →