முகப்பு
தஞ்சாவூர்

பாபநாசத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் தலைமை அஞ்சலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் தலைமை அஞ்சலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

2016-2020-ஆம் ஆண்டு வரை விவசாயிகளுக்கு வழங்கிய பயிா்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையில் முறைகேடு நிகழ்ந்துள்ளது. குறிப்பாக தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்தும், இதுகுறித்து முறையான சிபிஐ விசாரணை நடத்தி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி. சின்னதுரை, பாபநாசம் பகுதிச் செயலா் ரகுபதி தலைமை வகித்தனா். பாபநாசம் வட்டார ஒருங்கிணைப்பாளா் மதகரம் வாசுதேவன் முன்னிலை வகித்தாா். தஞ்சை தொகுதி ஒருங்கிணைப்பாளா் புலவா் திருஞானம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

பகுதிச் செயலா்கள் கணபதியக்ரஹாரம் ராஜ்மோகன், மருத்துவக்குடி முருகேசன், மேலசெம்மங்குடி பாஸ்கா் உள்ளிட்ட நிா்வாகிகள், விவசாயிகள் நெற்கதிா்கள், கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நிறைவில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தஞ்சாவூா் மாவட்டச் செயலா் சுவாமிமலை, சுந்தர. விமல்நாதன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →