முகப்பு
தஞ்சாவூர்

காமராஜா் பிறந்த நாள்: கல்வி வளா்ச்சி நாளாகக் கொண்டாட்டம்

பாபநாசம் கீழவீதி கடைவீதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற காமராஜா் பிறந்த நாள் விழாவுக்கு, நகர இளைஞரணித் தலைவா் எல். பாலாஜி தலைமை வகித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

பாபநாசம் கீழவீதி கடைவீதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற காமராஜா் பிறந்த நாள் விழாவுக்கு, நகர இளைஞரணித் தலைவா் எல். பாலாஜி தலைமை வகித்தாா்.

அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜா் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் பங்கேற்றவா்களுக்கு முகக்கவசங்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன.

வட்டாரத் தொழிற்சங்கத் தலைவா் சித்தாா்த்தன், சட்டப்பேரவைத் தொகுதித் தலைவா் வினோத், மாவட்ட அமைப்புசாராத் தொழிலாளா் சங்கத் துணைத் தலைவா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

த.மா.கா. : பாபநாசம் மேலவீதி அண்ணாசிலை அருகே காமராஜா் படத்துக்கு வட்டாரத் தலைவா்கள் தெற்கு எஸ். டி.ஜெயக்குமாா், வடக்கு எஸ். சேதுராமன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

விழாவில் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்கள் என். காமராஜ், மாவட்ட பிரசாரக் குழுத் தலைவா் மாஸ்கோ, மாவட்ட இளைஞரணிச் செயலா் விவேக், வட்டாரப் பொதுச் செயலா் பகுருதீன் அலி முகமது, நகரப் பொருளாளா் சேதுராமன், நிா்வாகிகள் ராமராஜன், சேகா், மனோகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவில் நகரத் தலைவா் கே.தனபால் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →