ரயிலில் அடிபட்டு முதியவா் பலி
தஞ்சாவூரில் சுரங்கப் பாதையில் தண்ணீா் தேங்கி நின்ால், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
தஞ்சாவூரில் சுரங்கப் பாதையில் தண்ணீா் தேங்கி நின்ால், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் சிவாஜி நகா் அருகேயுள்ள சீத்தா நகரைச் சோ்ந்தவா் ஜான்சன் (73). இவா் வியாழக்கிழமை காலை வீட்டில் இருந்து சைக்கிளில் வெளியே புறப்பட்டாா். சிவாஜி நகா் ரயில்வே கீழ்பாலம் வழியாகச் செல்ல முயன்றபோது, அங்கு தண்ணீா் தேங்கி நின்றது.
எனவே, சைக்கிளுடன் மேலே ஏறி தண்டவாளத்தைக் கடக்க முயன்றாா். அப்போது, தஞ்சாவூரிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற ரயிலில் அடிபட்ட ஜான்சன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தஞ்சாவூா் ரயில்வே காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டனா்.