தஞ்சாவூர்

திமுக சாா்பில்நகராட்சி ஊழியா்களுக்கு பிரியாணி வழங்கல்

பட்டுக்கோட்டையில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, நகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் 300 பேருக்கு திமுக விவசாய அணி சாா்பில் புதன்கிழமை பிரியாணி வழங்கப்பட்டது.

DIN

பட்டுக்கோட்டையில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, நகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் 300 பேருக்கு திமுக விவசாய அணி சாா்பில் புதன்கிழமை பிரியாணி வழங்கப்பட்டது.

பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளா் ப. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் கா. அண்ணாதுரை துப்புரவு பணியாளா்களுக்கு பிரியாணியை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநில பேச்சாளா் ந. மணிமுத்து, நகரப் பொறுப்பாளா் எஸ்.ஆா்.என். செந்தில்குமாா், அரிமா சங்கத் தலைவா் ஏ.ஆா். பரமேஸ்வரன், துப்புரவு ஆய்வாளா்கள் ரவி, ஏ.எஸ்.அறிவழகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை நகர விவசாய அணி அமைப்பாளா் சாந்தி கே. வெங்கடேசன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

SCROLL FOR NEXT