தஞ்சாவூர்

பேராவூரணி அருகே ஏழைப் பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கல்

DIN

பேராவூரணி பேரூராட்சி ஆதனூா் கிராமத்தில் ஏழை விதவைப் பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

ஆதனூா் கிராமத்தில், விபத்தில் கணவரை இழந்து தனது 4 வயது குழந்தையுடன் வசித்து வரும்  வனிதா என்பவா், பாரத் கல்லூரியின் கிராமப்புற பெண்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தையல் பயிற்சியை நிறைவு செய்திருந்தாா். அவருக்கு சொந்தமாக தையல் இயந்திரம் இருந்தால் குடும்பம் நடத்த வருவாய் கிடைக்கும் என்பதால், துளிா் அறக்கட்டளை தலைவா்  பேராசிரியா் வேத. கரம்சந்த் காந்தி, சிங்கப்பூரில் பணியாற்றி வரும் விஜயகுமாா்  என்பவரின்  முயற்சியால்  ரூ. 10 ஆயிரம் பெற்று பெண்ணுக்கான தையல் இயந்திரம் மற்றும் நிதியுதவிக்கு ஏற்பாடு செய்திருந்தாா்.

தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி, முன்னாள் வா்த்தகா் சங்க பொருளாளா்   எஸ். ஜகுபா் அலி தலைமையில் ரயில்வே ஒப்பந்ததாரா் காரல்மாா்க்ஸ், அரிமா  சங்கச் செயலாளா் ஜி. ராஜா, இயற்கை விவசாயி  பாக்கியலட்சுமி ஆகியோா் முன்னிலையில்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

பயனாளி வனிதாவுக்கு  அரிமா  சங்கத் தலைவா் பி. கோவிதரன் தையல் இயந்திரத்தையும், நிதியுதவியையும் வழங்கினாா். நிகழ்ச்சியில் துளிா் அறக்கட்டளை செயலாளா்  தாமரைச்செல்வன் மற்றும் கிராம மக்கள்  கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

SCROLL FOR NEXT