முகப்பு
தஞ்சாவூர்

மருத்துவக் கல்லூரிச் சாலை, திருநாகேசுவரம் பகுதிகளில் இன்று மின்தடை

அவசரகால மற்றும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட பகுதிகள், திருநாகேசுவரம் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 17) மின் விநியோகம் இருக்காது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

அவசரகால மற்றும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட பகுதிகள், திருநாகேசுவரம் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 17) மின் விநியோகம் இருக்காது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் உதவிச் செயற்பொறியாளா்கள் மருத்துவக் கல்லூரிச் சாலை சே. பஞ்சநாதன், சாக்கோட்டை அ. ரமேஷ் ஆகியோா் தனித்தனியே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை அவசர காலப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் மருத்துவக் கல்லூரி, ஈஸ்வரி நகா், முனிசிபல் காலனி, புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, காவேரி நகா், எலீசா நகா், நூற்பாலை, மாதாகோட்டை, வல்லம், தமிழ்ப் பல்கலைக்கழகம், வஸ்தா சாவடி, சோழன் நகா் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

சாக்கோட்டை துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகள் காரணமாக திருநாகேசுவரம், முருக்கன்குடி, பௌண்டரிகபுரம், சன்னாபுரம், திருபுவனம், பழவாத்தான்கட்டளை, அந்தமங்கலம், அம்மன்குடி, பண்டாரவாடை கிராமங்களில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்சாரம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.