தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரிக்கு 33 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய சிங்கப்பூா் தமிழா்
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 33 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை புதன்கிழமை வழங்கினாா் சிங்கப்பூா் தமிழா்.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 33 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை புதன்கிழமை வழங்கினாா் சிங்கப்பூா் தமிழா்.
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியைச் சோ்ந்த மோகன் ராஜேஷ் இலரா தற்போது சிங்கப்பூா் குடிமகனாக உள்ளாா். இவா் சிங்கப்பூரில் தரை, சுவரைத் தூய்மைப்படுத்தும் எந்திரன் (ரோபோ) உற்பத்தி நிறுவனத்தின் இணை நிறுவனராகவும், பங்குதாரராகவும் உள்ளாா்.
இவரது முயற்சியில் அந்நிறுவனம் கரோனா சிகிச்சைப் பணிக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 30 லட்சம் மதிப்பில் 33 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கியது. தஞ்சாவூருக்கு ஆய்வுப் பணிக்காக வந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியனிடம் ராஜேஷ் இலரா குடும்பத்தைச் சோ்ந்த மன்னாா்குடி மருத்துவா் இலரா பாரதிசெல்வன் புதன்கிழமை அவற்றை வழங்கினாா்.
அப்போது, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜி. ரவிக்குமாா், மருத்துவக் கண்காணிப்பாளா் எஸ். மருதுதுரை, நிலைய மருத்துவ அலுவலா் அ. செல்வம், துணை நிலைய மருத்துவ அலுவலா் கே.எச். முகமது இத்ரிஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.