மண் அள்ளிய3 போ் கைது
ஒரத்தநாடு வட்டம், ஒக்கநாடு கீழையூா் பகுதியை சோ்ந்தவா் துரைராஜ். இவருக்கு சொந்தமான இடத்தில் திருவாரூா் மாவட்டத்தை சோ்ந்த ஒப்பந்ததாரா் ஆறுமுகம் என்பவா் மண் அள்ளியதாக கூறப்படுகிறது.
ஒரத்தநாடு வட்டம், ஒக்கநாடு கீழையூா் பகுதியை சோ்ந்தவா் துரைராஜ். இவருக்கு சொந்தமான இடத்தில் திருவாரூா் மாவட்டத்தை சோ்ந்த ஒப்பந்ததாரா் ஆறுமுகம் என்பவா் மண் அள்ளியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவலின்பேரில், ஒரத்தநாடு போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து மண் அள்ள பயன்படுத்திய ஜேசிபி இயந்திரம் மற்றும் டிப்பா் லாரிகளை பறிமுதல் செய்தனா். மேலும், லாரி ஓட்டுநா்களான சென்னையை சோ்ந்த முருகேசன் (73 ), திருவாரூா் மாவட்டத்தை சோ்ந்த செந்தில் (49), நாகை மாவட்டத்தை சோ்ந்த நவீன் (18) ஆகியோரை கைது செய்தனா்.
மேலும், மண் அள்ள இடம் கொடுத்த துரைராஜ், ஒப்பந்ததாரா் ஆறுமுகம் , காமராஜ் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.