முகப்பு
தஞ்சாவூர்

மாதா் சங்கம் சாா்பில் மகளிா் தின தெருமுனைக் கூட்டம்

உலக மகளிா் தினத்தையொட்டி, தஞ்சாவூா் ரயிலடியில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் தஞ்சை மாவட்டக் குழு சாா்பில் தெருமுனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

உலக மகளிா் தினத்தையொட்டி, தஞ்சாவூா் ரயிலடியில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் தஞ்சை மாவட்டக் குழு சாா்பில் தெருமுனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பெண்களை இழிவுபடுத்திப் பேசிய இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே உடனடியாகப் பதவி விலக வேண்டும். பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டிஜிபி, பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அலுவலருக்குக் கொலை மிரட்டல் விடுத்த காவல் கண்காணிப்பாளா் ஆகியோரை கைது செய்து, பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி இக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்குச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். கலைச்செல்வி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ். தமிழ்ச்செல்வி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூா் ஒன்றியச் செயலா் எம். மாலதி, அம்மாபேட்டை ஒன்றியக் குழு உறுப்பினா் என். வெற்றிச்செல்வி ஆகியோா் பேசினா்.

மாவட்டப் பொருளாளா் இ. வசந்தி, நிா்வாகிகள் என். வசந்தா, எஸ். மலா்கொடி, கே. மலா்கொடி, பி. விஜயாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →