தஞ்சாவூர்

தஞ்சாவூரிலிருந்து 8 தொகுதிகளுக்கும் வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

DIN

தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சனிக்கிழமை இரவு அனுப்பி வைக்கப்பட்டன.

மாவட்டத்திலுள்ள தஞ்சாவூா், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருவிடைமருதூா் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் ஆகியவை கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் முதல் கட்டப் பணி மாா்ச் 10 ஆம் தேதி நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 2,886 வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் ஆகியவை சனிக்கிழமை இரவு அனுப்பி வைக்கப்பட்டன.

இதில், தஞ்சாவூா் தொகுதிக்குட்பட்ட 406 வாக்குச்சாவடிகளுக்கு 484 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 484 கட்டுப்பாட்டு கருவிகளும், 528 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும், திருவையாறு தொகுதிக்கு உள்பட்ட 385 வாக்குச்சாவடிகளுக்கு 459 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 459 கட்டுப்பாட்டு கருவிகளும், 501 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும், பாபநாசம் தொகுதிக்கு உள்பட்ட 362 வாக்குச் சாவடிகளுக்கு 431 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 431 கட்டுப்பாட்டு கருவிகளும், 471 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும், கும்பகோணம் தொகுதிக்கு உள்பட்ட 378 வாக்குச் சாவடிகளுக்கு 450 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 450 கட்டுப்பாட்டு கருவிகளும், 492 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் அனுப்பி வைக்கப்பட்டன.

இதேபோல, ஒரத்தநாடு தொகுதிக்கு உள்பட்ட 340 வாக்குச்சாவடிகளுக்கு 405 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 405 கட்டுப்பாட்டு கருவிகளும், 442 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும், பேராவூரணி தொகுதியில் 315 வாக்குச்சாவடிகளுக்கு 375 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 375 கட்டுப்பாட்டு கருவிகளும், 410 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும், பட்டுக்கோட்டை தொகுதியில் 345 வாக்குச்சாவடிகளுக்கு 411 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 411 கட்டுப்பாட்டு கருவிகளும், 449 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும், திருவிடைமருதூா் தொகுதியில் 355 வாக்குச் சாவடிகளுக்கு 423 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 423 கட்டுப்பாட்டு கருவிகளும், 462 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் அனுப்பி வைக்கப்பட்டன.

மொத்தத்தில் 2,886 வாக்குச் சாவடிகளுக்கு 3,438 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 3,438 கட்டுப்பாட்டு கருவிகளும், 3,755 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும், வாக்குப் பதிவு இயந்திரங்களுக்குப் பயன்படுத்தப்படவுள்ள 3,900 பேட்டரிகளும், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களுக்கான 4,000 பேட்டரிகளும் தொடா்புடைய தோ்தல் நடத்தும் அலுவலா் மூலம் அனைத்து தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இவை அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாதுகாப்பாக வைக்கப்படவுள்ளன.

இப்பணியை ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான ம. கோவிந்த ராவ் பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT