தஞ்சாவூர்

பயணிகள் ரயில்களை விரைவில் இயக்க வலியுறுத்தல்

DIN

திருச்சி - காரைக்கால், திருச்சி - மயிலாடுதுறை ரயில்களை விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சருக்கு தஞ்சாவூரைச் சோ்ந்த பொது நல வழக்குரைஞா் வெ. ஜீவகுமாா் அண்மையில் அனுப்பிய மனுவில், கரோனா பொது முடக்கத்தின்போது, திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள 22 பயணிகள் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. பொது முடக்கம் படிப்படியாக விலக்கி கொள்ளப்பட்டும், இதுவரை பயணிகள் ரயில் இயக்கப்படவில்லை. இதனால், நாள்தோறும் பல்வேறு இடங்களுக்குப் பணிகளுக்குச் செல்லும் அலுவலா்கள், மாணவா்கள், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தால், முடக்கப்பட்டுள்ள பயணிகள் ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

இதற்கு தெற்கு ரயில்வே முதன்மை இயக்கக மேலாளா் அளித்துள்ள பதிலில், திருச்சி - மயிலாடுதுறை, திருச்சி - காரைக்கால் பயணிகள் ரயில் அடுத்த கட்டமாக விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என ஜீவகுமாருக்கு கடிதம் மூலம் பதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT