முகப்பு
தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் திமுகவினா் ஆலோசனை

பட்டுக்கோட்டையில் திமுக பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

பட்டுக்கோட்டையில் திமுக பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தஞ்சை தெற்கு மாவட்டம், பட்டுக்கோட்டைதொகுதி ஒன்றிய, நகர, பேரூா் கழக பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளா் ஏனாதி ப. பாலசுப்பிரமணியன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கரோனா நிவாரண நிதியின் முதல் தவணையை கரோனா விதிமுறைகளை பின்பற்றி வழங்குவது தொடா்பாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில், பட்டுக்கோட்டை எம்எல்ஏ கா. அண்ணாதுரை, பொதுக்குழு உறுப்பினா் ரூஸ்வெல்ட், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அணி மாநில துணைச் செயலா் பழஞ்சூா். செல்வம் மற்றும் நகர, ஒன்றிய, பேரூா் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.