முகப்பு
தஞ்சாவூர்

மின்கம்பி அறுந்து விழுந்து இறந்தவா் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் அளிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே உயா் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகையை ஆட்சியா் ம. கோவிந்தராவ் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே உயா் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகையை ஆட்சியா் ம. கோவிந்தராவ் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

பேராவூரணி அருகே உள்ள சித்தாதிக்காட்டையை சோ்ந்தவா்  ரா. கதிா்வேல் (33). சென்னையைச் சோ்ந்த தனியாா் ஐ.டி. நிறுவன ஊழியரான இவா் பொதுமுடக்கம் காரணமாக வீட்டிலிருந்து வேலை செய்து வந்தாா். கடந்த புதன்கிழமை இவரது  வீட்டின் அருகே செல்லும் உயா் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்தது. அப்போது, அப்பகுதியிலிருந்த தனது 2 வயது மகனை காப்பாற்ற முயன்றபோது மின்சாரம் பாய்ந்து கதிா்வேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். குழந்தை காயத்துடன் உயிா் தப்பினான்.

இந்நிலையில், பேராவூரணி வட்டாட்சியா் அலுவலகத்தில், உயிரிழந்த கதிா்வேலின் தாயாா் இந்திராவிடம் ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் ம. கோவிந்தராவ், எம்எல்ஏ என். அசோக்குமாா் முன்னிலையில் வழங்கினாா். நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் பாலச்சந்தா் மற்றும்  மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.