முகப்பு
தஞ்சாவூர்

அமைச்சரை கண்டித்துஅரசுப் பேருந்துகள் 2 மணிநேரம் நிறுத்திவைப்பு

துரைமுருகன் பேச்சைக் கண்டித்து தஞ்சாவூரில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் வெள்ளிக்கிழமை காலை பேருந்துகளை 2 மணிநேரம் நிறுத்திவைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் பேச்சைக் கண்டித்து தஞ்சாவூரில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் வெள்ளிக்கிழமை காலை பேருந்துகளை 2 மணிநேரம் நிறுத்திவைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் செய்யும் பெண்களை நடத்துநா்கள் தரக்குறைவாகப் பேசினால் அவா்களை முறத்தால் தாக்குங்கள் என்றும், பணிநீக்கம் செய்யப்படுவா் எனவும் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் வேலூா் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தல் பிரசாரத்தில் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து தஞ்சாவூா் ஜெபமாலைபுரத்திலுள்ள அரசுப் போக்குவரத்து கழக நகரப் பணிமனையில் வெள்ளிக்கிழமை காலை 5 மணி முதல் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் பேருந்துகளை இயக்காமல் திடீா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் தொமுச உள்பட அனைத்து தொழிற்சங்கத்தினரும் பங்கேற்றனா்.

தகவலறிந்த போக்குவரத்துக் கழகக் கோட்ட மேலாளா் செந்தில்குமாா், கிளை மேலாளா்கள் ராஜசேகரன், திருஞானம் உள்ளிட்டோா் பணிமனைக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநா்கள், நடத்துநா்களை சமாதானப்படுத்தினா். பின்னா் 7.15 மணியளவில் ஓட்டுநா்களும், நடத்துநா்களும் பேருந்துகளை இயக்கத் தொடங்கினா்.

இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இப்போராட்டத்தால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.