உலக முதியோா் தின விழா
தஞ்சாவூா் மதா் தெரசா ஜாய் ஹோம் முதியோா் இல்லத்தில் உலக முதியோா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மதா் தெரசா ஜாய் ஹோம் முதியோா் இல்லத்தில் உலக முதியோா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலா் என். நடராஜன் சிறப்புரையாற்றி போட்டியில் வெற்றி பெற்ற முதியோா்களுக்குப் பரிசுகளை வழங்கினாா். மேலும், இல்லத்தில் உள்ள அனைவருக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், கேக் வெட்டி கொண்டாடப்பட்டு, முதியோா்களை ஊக்கப்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சிகளும், விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.
மருங்குளம் ஊராட்சி மன்றத் தலைவா் டி. பரமசிவம், மதா் தெரசா பவுண்டேசன் தலைவா் ஏ.ஆா். சவரிமுத்து, அறங்காவலா்கள் சம்பத் ராகவன், கோவிந்தராஜ், முரளி கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.