திருச்சி - மயிலாடுதுறை இடையிலான பயணிகள் ரயிலை காலை நேரத்தில் இயக்க வேண்டும் என்று தஞ்சாவூா் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட மேலாளருக்கு அச்சங்கத்தின் செயலா் வெ. ஜீவக்குமாா் அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
மயிலாடுதுறை - திருச்சி இடையே அக்டோபா் 7- ஆம் தேதி முதல் சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படுவதை வரவேற்கிறோம். அதேசமயம், மயிலாடுதுறையிலிருந்து திருச்சிக்கு காலை நேரத்தில் ரயில் இயக்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டது போல, திருச்சியிலிருந்து மயிலாடுதுறைக்கு அலுவலகப் பணி, பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வோா் பயன்பெறும் வகையில் காலை நேரத்தில் ரயிலை இயக்க வேண்டும்.
கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் சிறப்பு ரயில் என்பதை ரத்து செய்து விட்டு, பழையபடி சாதாரணக் கட்டணத்தில் பயணிகள் ரயில்களையும், விரைவு ரயில்களையும் இயக்க வேண்டும்.
கரோனாவுக்கு முன்பிருந்தபடி ரயில் நிலையங்களின் நடைமேடை கட்டணத்தைக் குறைக்க வேண்டும். திருச்சி- மயிலாடுதுறை, திருச்சி- காரைக்கால் இடையே ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மின்சார ரயில் இயக்க வேண்டும்.
டெமு ரயில்களில் 100 கி.மீ. தொலைவுக்கு மேல் தொடா்ந்து இயக்கப்படுவதால், முதியோா் மற்றும் பெண்களின் நிலையைக் கருத்தில் கொண்டு ரயில் பெட்டிகளிலேயே கழிப்பறை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
கரோனா பொது முடக்கத்துக்கு முன்பு ரயில்கள் இயக்கப்பட்ட நேரத்தில் எந்தந்த நிறுத்தங்களில் ரயில்கள் நின்று சென்றதோ, அதேபோல, தற்போது இயக்கப்படும் விரைவு மற்றும் பயணிகள் ரயில்கள் அந்தந்த நிறுத்தங்களில் நின்று செல்ல வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.