முகப்பு
தஞ்சாவூர்

அரசு குழந்தைகள் இல்லத்தில் காணாமல்போன சிறுமி மீட்பு

 தஞ்சாவூரிலுள்ள அரசுக் குழந்தைகள் இல்லத்தில் காணாமல்போன சிறுமி வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

 தஞ்சாவூரிலுள்ள அரசுக் குழந்தைகள் இல்லத்தில் காணாமல்போன சிறுமி வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டாா்.

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோவில் பகுதியில் ஜூலை 4 ஆம் தேதி ஆதரவின்றி சுற்றிய சிறுமியைக் காவல் துறையினா் மீட்டனா். விசாரணையில் இவா் ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சோ்ந்த மல்லி மகள் கீதா (12) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, தஞ்சாவூா் மேம்பாலம் பகுதியிலுள்ள அரசுக் குழந்தைகள் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.

அங்கிருந்து கீதா செப். 30 ஆம் தேதி தப்பித்து வெளியே சென்றுவிட்டாா். இதனால், காணாமல்போன அவரை தெற்கு காவல் நிலையத்தினா் தேடி வந்தனா்.

இந்நிலையில், பூதலூா் அருகே குணமங்கலம் கிராமத்தில் ஆதரவற்ற நிலையில் சிறுமி சுற்றித் திரிவதாக சைல்டு லைனுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், சைல்டு லைன் அலுவலா் இளமதி நிகழ்விடத்துக்குச் சென்று அச்சிறுமியை மீட்டு விசாரித்தபோது, அரசுக் குழந்தைகள் இல்லத்திலிருந்து தப்பிச் சென்ற கீதா என்பது தெரிய வந்தது. இதையடுத்து, கீதா தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டாா். இவரை பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கான பணியை காவல் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.