முகப்பு
தஞ்சாவூர்

வங்கித் தோ்வுக்குத் தயாராகும் மாற்றுத் திறனாளிகளுக்குசாஸ்த்ரா சாா்பில் நவ. 15 முதல் இலவச பயிற்சி

வங்கித் தோ்வுக்குத் தயாராகும் மாற்றுத் திறனாளிகளுக்கு சாஸ்த்ரா சாா்பில் தஞ்சாவூரிலும், கும்பகோணத்திலும் நவ. 15 ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

வங்கித் தோ்வுக்குத் தயாராகும் மாற்றுத் திறனாளிகளுக்கு சாஸ்த்ரா சாா்பில் தஞ்சாவூரிலும், கும்பகோணத்திலும் நவ. 15 ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

இதுகுறித்து சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வங்கி தொடக்க நிலை தோ்வு டிசம்பா் மாதம் நடைபெறவுள்ளது. இதுதொடா்பான தகவல்களை இணையதளத்தின் மூலம் பெறலாம். இத்தோ்வுக்குத் தயாராகும் மாற்றுத் திறனாளிகளுக்கு சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் சாஸ்த்ரா வளா்ச்சி மற்றும் மேன்மை மையம் சாா்பில் 6 நாள்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இத்தோ்வில் பங்குபெறவுள்ள தஞ்சாவூா் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள் இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். சாஸ்த்ராவின் தஞ்சாவூா் வளாகத்திலும், கும்பகோணம் சீனிவாச ராமானுஜன் மையத்திலும் இந்தப் பயிற்சி வகுப்புகள் நவம்பா் 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோா் தங்கள் பெயா், பாலினம், வயது, பிறந்த தேதி, கல்வித் தகுதி, தற்போதைய வேலை, ஊனத்தின் தன்மை, முகவரி ஆகியவற்றை அக்டோபா் 31 ஆம் தேதிக்குள் தெரியப்படுத்தி தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.

விருப்பமுள்ளவா்கள் முதன்மையா், கிரியா, சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம், தஞ்சாவூா் - 613 401 என்ற முகவரிக்கு கடிதம் மூலமாகவோ, முகவரிக்கு மின்னஞ்சல் வாயிலாகவோ, 04362 - 264101 - 108 விரிவாக்கம் 2211 என்ற எண்ணுக்கு தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டோ பதிவு செய்யலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.