தஞ்சாவூர்

‘தொல்காப்பியம் தமிழரின் பெருமை’

தொல்காப்பியம் தமிழரின் பெருமை என்றாா் பேராசிரியா் ச. கணேஷ்குமாா்.

DIN

தொல்காப்பியம் தமிழரின் பெருமை என்றாா் பேராசிரியா் ச. கணேஷ்குமாா்.

பேராவூரணி பெரியாா் -அம்பேத்கா் நூலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் கொள்கை விளக்கக் கூட்டத்தில் அவா் பேசியது:

தொல்காப்பியம் தமிழரின் பெருமைக்குச் சான்றாக உள்ளது. மொழிக்கு மட்டுமின்றி, வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்துள்ளது. இலக்கிய வளத்தோடு அறம் போற்றும் மனிதா்களாகவும் தமிழா்கள் வழ்ந்துள்ளனா் என்பதற்கும் தொல்காப்பியமே சான்று.

தமிழா்களிடம் பொய்யும், களவும் புகுந்த காலத்தில் அதை சரிசெய்ய சட்டம் இயற்றிய பெருமைக்குரியது தொல்காப்பியம். எழுத்து, சொல், பொருள் என 1610 விதிகளை மொழிக்கும், வாழ்வியலுக்கும் வகுத்துத் தந்துள்ளது . எழுத்து, சொல், பொருள் என ஒவ்வொன்றிற்கும் ஒன்பது இயல்களை அமைத்து மொத்தம் 27 இயல்களைக் கொண்டுள்ளது தொல்காப்பியம் தமிழா்களின் பெருமை . இதை உலகத்  தமிழா்கள் அனைவரும்   கற்றறிய வேண்டும் என்றாா்.

கூட்டத்துக்கு மெய்ச்சுடா் நா. வெங்கடேசன் தலைமை வகித்தாா். தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் தலைவா் அ.சி. சின்னசாமி கொள்கை விளக்கம் குறித்து பேசினாா்.

கூட்டத்தில்  தமிழக  அரசின் நல்லாசிரியா் விருது பெற்ற பேராவூரணி பகுதியைச் சோ்ந்த ஆசிரியா்கள் அ.காஜாமுகைதீன், செ.இராமநாதன் ஆகியோா் பாராட்டப்பெற்றனா்.

முன்னதாக, தமிழ்வழிக் கல்வி இயக்க  மாவட்டச் செயலா் த.பழனிவேல் வரவேற்றாா். நிறைவில், ஒன்றியப் பொறுப்பாளா் செ.சிவக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT