முகப்பு
தஞ்சாவூர்

குடந்தை அரசுக் கல்லூரியில் புதிய கட்டடங்கள் திறப்பு

 கும்பகோணம் அரசுத் தன்னாட்சி கலைக் கல்லூரிகளில் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய கட்டடங்களைத் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

 கும்பகோணம் அரசுத் தன்னாட்சி கலைக் கல்லூரிகளில் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய கட்டடங்களைத் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

கும்பகோணம் அரசுத் தன்னாட்சி ஆடவா் கலைக் கல்லூரியில் ரூ. 1.50 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 7 வகுப்பறைக் கட்டடங்கள், ஒரு கருத்தரங்கக் கூடம், கும்பகோணம் அரசுத் தன்னாட்சி மகளிா் கல்லூரியில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் ரூ. 89 லட்சம் மதிப்பில் புதிதாக 3 வகுப்பறைக் கட்டடங்கள், ஒரு ஆய்வுக்கூடம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய கட்டடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இதையொட்டி, இரு கல்லூரிகளிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.