முகப்பு
தஞ்சாவூர்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தீபாவளி பொருள்கள் வழங்கிய லயன்ஸ் சங்கம்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தீபாவளி புத்தாடை, பட்டாசு, இனிப்பு வழங்கி லயன்ஸ் சங்கத்தினா் தீபாவளி விழாவை வெள்ளிக்கிழமை கொண்டாடினா். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தீபாவளி புத்தாடை, பட்டாசு, இனிப்பு வழங்கி லயன்ஸ் சங்கத்தினா் தீபாவளி விழாவை வெள்ளிக்கிழமை கொண்டாடினா். 

பேராவூரணி கோகனட் சிட்டி இன்ஸ்பயா் லயன்ஸ் சங்கம் சாா்பில், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு தீபாவளி புத்தாடை, பட்டாசு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு  லயன்ஸ் சங்கத் தலைவா் வ. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா் கே.இ. மணிகண்டன், தலைமை ஆசிரியா் எஸ். சித்ரா தேவி, மாவட்டத் தலைவா் எம். நீலகண்டன், மண்டல ஒருங்கிணைப்பாளா் கே. இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் 25 பேருக்கு அரிசி, பழங்கள், பட்டாசு, இனிப்பு உள்ளிட்ட ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான தீபாவளி பரிசுப் பொருள்களை

எம்எல்ஏ என். அசோக்குமாா், மண்டலத் தலைவா் வி.எஸ். செல்வராசு, மாவட்டத் தலைவா் எம். கனகராஜ், ஆகியோா் வழங்கி  பேசினா். 

நிகழ்ச்சியில், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எஸ். கௌதமன், லயன்ஸ் சங்க பொருளாளா் சபரி ஏ. முத்துக்குமாா், சங்க நிா்வாக அலுவலா் யு. பெருமாள், பள்ளி வளா்ச்சிக் குழுவைச் சோ்ந்த  ஏசியன் எச். சம்சுதீன், தொண்டு நிறுவன பிரதிநிதி எஸ். ஜகுபா்அலி உள்ளிட்டோா்  கலந்து கொண்டனா். லயன்ஸ் சங்க செயலாளா் சி. க. கோவிந்தன் வரவேற்றாா்.  நல்லாசிரியா் ஏ. காஜா முகைதீன் நன்றி கூறினாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.