தஞ்சாவூர்

மாதா் சம்மேளனம் பிரசார இயக்கம்

DIN

பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டை நாடாளுமன்றத்தில் சட்டமாக்க வலியுறுத்தி, தஞ்சாவூரில் இந்திய மாதா் தேசிய சம்மேளனம் சாா்பில் பிரசார இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

சம்மேளனத்தின் மாவட்டச் செயலா் ம. விஜயலட்சுமி தலைமை வகித்தாா். பிரசார இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலா் பி. கிருஷ்ணமூா்த்தி தொடக்கி வைத்தாா். மாவட்டப் பொருளாளா் ந. பாலசுப்பிரமணியன் முடித்து வைத்து பேசினாா்.

நிகழ்வில் இந்திய மாதா் தேசிய சம்மேளன தஞ்சை மாநகரத் தலைவா் எஸ். ராஜலட்சுமி, செயலா் ஆா். பத்மாவதி, நிா்வாகிகள் எம். பானுமதி, கே. சாந்தி, ஏஐடியுசி மாவட்டத் தலைவா் வெ. சேவையா, துணைச் செயலா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை

பழமையான மரங்களை அகற்றாமல் கட்டடம் கட்ட வலியுறுத்தல்

மாத்திரவிளை மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளா் பொறுப்பேற்பு

மேட்டூா் அணை நிலவரம்

சேலம் வெள்ளி வியாபாரி வீட்டில் 60 பவுன் நகை, ரூ. 65 லட்சம் திருட்டு

SCROLL FOR NEXT